‘பெடரரை மிஞ்சுவேன்’ - ஜோகோவிச் நம்பிக்கை

டென்னிஸ் போட்டிகளில் பெடரரை மிஞ்சுவேன் என்று ஜோகோவிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘பெடரரை மிஞ்சுவேன்’ - ஜோகோவிச் நம்பிக்கை
Published on

பெல்கிரேடு,

டென்னிசில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (19), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (17) ஆகியோர் உள்ளனர். 38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. இதே சமயம் சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச் கடைசி 6 கிராண்ட்ஸ்லாமில் 4-ஐ கைப்பற்றி இருக்கிறார். நம்பர் ஒன் வீரராக வலம் வரும் 32 வயதான ஜோகோவிச் அளித்த ஒரு பேட்டியில், எனக்கு என் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. ஓய்வு பெறுவதற்குள் பெடரர், நடாலின் சாதனையை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சிறப்பை என்னால் எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதே போல் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனையையும் என்னால் படைக்க முடியும். இவற்றை அடைவது தான் எனது இலக்கு. 40 வயது வரை கூட நான் விளையாடலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com