இன்று ஆசிரியர் தினம்: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்

வாழ்க்கையில் வெற்றி பெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு. வாழ்க்கையை வளமடையச் செய்வதே கல்வியின் நோக்கம்.
இன்று ஆசிரியர் தினம்: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்
Published on

முன்மாதிரியான ஆசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று (5.9.2024) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதுடன், கல்வியின் சிறப்பு குறித்தும், சமூக அக்கறை குறித்தும் ஊக்கம் அளிக்கும் வகையில் அவர் கூறியுள்ள மேற்கொள்கள் சிலவற்றை பார்ப்போம்.

* சுயமாக சிந்திக்க உதவுபவர்களே உண்மையான ஆசிரியர்கள்.

* ஆசிரியர்கள் நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும்.

* அறிவின் அடிப்படையில் மட்டுமே மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியமாகும்.

* நமக்குத் தெரியும் என்று நினைக்கும் போது, கற்றுக்கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.

* கலாச்சாரங்களுக்கிடையில் பாலம் கட்டும் கருவி புத்தகங்கள்.

* வாழ்க்கையில் வெற்றி பெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு. வாழ்க்கையை வளமடையச் செய்வதே கல்வியின் நோக்கம்.

* ஒரு சிறிய வரலாற்றை உருவாக்க பல நூற்றாண்டுகள் ஆகும்; ஒரு பாரம்பரியத்தை உருவாக்க பல நூற்றாண்டுகள் வரலாறு எடுக்கும்.

* நம்முடைய பழக்கவழக்கங்கள் ஒழுங்காக இருந்தால் நமக்கு பேராசை வராது. போதும் என்ற மனமே மிகச்சிறந்த வரமாகும்.

* முதலில் சேவை, பின்பு தன்னலம் என்ற மனப்பான்மை அனைவரிடமும் ஏற்படவேண்டும். அப்போதுதான் நல்ல சமூகம் உருவாகும்.

* நல்ல பழக்கங்களையும், நாகரிகமாக நடத்தையையும் கொண்டுள்ள பண்புள்ள மக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்.

* கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் வாழ்கிறார், உணர்கிறார், துன்பப்படுகிறார். காலப்போக்கில், அவருடைய பண்புகளும், அறிவும், அழகும், அன்பும் நம் ஒவ்வொருவருக்கும் வெளிப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com