பெண்களிடம் கவர்ந்திழுக்கும் அம்சம் எது?

உடலழகா... புன்னகையா... அல்லது முக அழகா?- இதில் பெண்களிடம் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் எது? என்ற கேள்வியோடு களத்தில் குதித்தார்கள், இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
பெண்களிடம் கவர்ந்திழுக்கும் அம்சம் எது?
Published on

இந்த ஆய்வில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கலந்து கொண்டார்கள். 28 சதவிகித ஆண்கள், ''பெண்களின் புன்னகைக்குக் காந்தத்தைப் போல் கவரும் வசீகரம் இருக்கிறது'' என்றார்கள். ஆய்வில் பங்கேற்ற பெண்கள் கூட இதே கருத்தை ஒப்புக்கொண்டார்கள்.

அப்படியென்றால் மிக அழகான ஒரு பெண், கவர்ச்சியாக உடை அணிந்து, கொஞ்சம் கூட சிரிக்காமல் 'உம்' மென்று இருந்தால் ஆண்களுக்கு அவரைப் பிடிக்காமல் போய் விடுமா? இந்தக் கேள்வி அவர்களுக்கும் எழுந்தது. இதற்காகவே ஒரு பரிசோதனையும் நடத்தப்பட்டது. மிகக் கவர்ச்சியான பெண்களைக் கோபமாகவும், பதற்றமாகவும் போஸ் கொடுக்க வைத்து, போட்டோக்களை ஆண்கள் சிலரிடம் காண்பித்தனர்.

'கோபமாக இருப்பவர்களை யாருக்குப் பிடிக்கும்' என்று ஜகா வாங்கியவர்கள், சுமாராக இருந்தாலும் சிரித்த முகம் காட்டும் புகைப்படத்தையே தங்களுக்குப் பிடித்ததாகத் தேர்ந்தெடுத்தனர். அவ்வளவு ஏன்..? கோபமாக போஸ் கொடுத்த பெண்களே போட்டோக்களைப் பார்த்து பயந்து விட்டார்களாம். 52 சதவீத பெண்களுக்கு தங்களை உம்மென்ற கோலத்தில் பார்க்கப் பிடிக்கவில்லை என்கிறது அந்த ஆய்வு.

'புன்னகையுடன், தாடையைத் தரை நோக்கி லேசாகத் தாழ்த்தி, மேல் இமைகள் வழியாகப் பார்த்தால், அந்தப் பெண் மற்றவர்களைக் கவரலாம்!' என்கிறது ஆய்வு முடிவு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com