பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..யார் தெரியுமா.?


பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..யார் தெரியுமா.?
x

image courtesy:PTI

நடப்பு ஐ.பி.எல். சீசனில் பஞ்சாப் அணியின் கடைசி லீக் போட்டிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சண்டிகர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய 3 அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை, பெங்களூரு இடையே போட்டி நிலவுகிறது.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 13 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து 9-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பஞ்சாப், தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சீசனுக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷிகர் தவான் காயத்தால் விலகிய நிலையில், சாம் கர்ரண் கேப்டனாக செயல்பட்டார். தற்போது அவரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தாயகம் திரும்பி விட்டார். இந்நிலையில் நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் கடைசி போட்டிக்கான கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நடப்பு சீசனில் கோப்பை அறிமுக விழாவில் பஞ்சாப் அணி சார்பாக இவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story