இத்தாலி ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்


இத்தாலி ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகோ காப் 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் கின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காப் போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோத உள்ளார்.


Next Story