இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறாதது ஏன்? - தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்


இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறாதது ஏன்? -  தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
x

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

புதுடெல்லி,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவுடன் கலந்து ஆலோசித்த பிறகு அணி பட்டியல் வெளியிடப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து கேப்டன் ரோகித் சர்மா , தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது கே.எல். ராகுல் இந்திய அணியில் ஏன் இடம்பெறவில்லை என அஜித் அகர்கர் விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது ,

கே.எல்.ராகுல் ஐ.பி.எல் தொடரில் தொடக்க வீரராக ஆடி வருகிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட எங்களுக்கு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் தேவை. அதனால், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளோம். சஞ்சு சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார். அதனால் இது யார் சிறந்தவர்கள் என்பது பற்றியதல்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதை பற்றியது. என தெரிவித்தார்.


Next Story