இன்றைய ராசிபலன் -15.5.2024


12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 May 2024 2:11 AM GMT (Updated: 15 May 2024 2:26 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 2-ம் தேதி புதன் கிழமை

நட்சத்திரம் : இன்று மாலை 6.12 வரை ஆயில்யம் பின்பு மகம்

திதி: இன்று காலை 7.40 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் மாலை : 12.00 -1.30

எமகண்டம் காலை : 7.30 - 9.00

குளிகை காலை : 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை : 10.30 -11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை போற்றுவர். ஊடகத் துறையினருக்கு மதிப்பு கூடும். உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிட்டும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வாகனத்தை சீர் செய்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

சொத்து சம்பந்தப்பட்ட வகையில் நன்மை உண்டு. நண்பர்கள் ஒன்று சேருவர். தங்கள் துணை தங்களுக்கு அனுசரனையாக இருப்பார். வீட்டிற்கு நல்ல வேலையாள் கிடைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

சிம்மம்

உத்யோகத்தில் நீண்ட நாட்களாக தயங்கிய நீங்கள் இன்று தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விற்பனையாளர்களுக்கு விற்பனை கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். தேகம் மின்னும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

துலாம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் மற்றவர் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

மேலதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் தவறாக பேச வேண்டாம். பேசினால் பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சமூக நலனில் ஆர்வம் கூடும். சகோதரருக்காக அலைச்சல் ஏற்படும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

தனுசு

உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் தங்களுக்கு முடிவுகளை எடுக்க முழு சுதந்திரம் கிடைக்கும். தாய் மீது அன்பு அதிகரிக்கும். மார்கெட்டிங் பிரிவினருக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உடல் நலம் தேறிவரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. இல்லாவிட்டால் தேவையற்ற பிரிவினை ஏற்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளால் நன்மை உண்டு. கோர்ட் வழக்கு வகையில் விழிப்புத் தேவை. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். குடும்பத்தில் கலகலப்பும் சலசலப்பும் கலந்திருக்கும். அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. எதிர்காலத்திற்கு சேமிப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


Next Story