நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு


நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 April 2024 1:22 PM GMT (Updated: 19 April 2024 2:50 PM GMT)

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 60.03 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தமிழ்நாடு, அருணாச்சலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், அந்தமான் - நிகோபார், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர். நாடு முழுவதும் நடந்த முதற்கட்ட தேர்தலில் 60.03 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது. தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.


Next Story