உலக புற்றுநோய் தினம்


உலக  புற்றுநோய் தினம்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:30 AM GMT (Updated: 29 Jan 2022 11:31 AM GMT)

ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மார்பகம், வாய், கர்ப்பப்பை, இரைப்பை, நுரையீரல், ரத்தம் என உடலின் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும்.

லக அளவில், மக்களை அதிகமாக தாக்கும் நோய்களில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஏழு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி 4-ந் தேதியை ‘உலக புற்றுநோய் தினமாக’ அறிவித்தது. உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், அதுகுறித்த சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும். 

ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மார்பகம், வாய், கர்ப்பப்பை, இரைப்பை, நுரையீரல், ரத்தம் என உடலின் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும்.

முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மூலம் இந்த நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். இந்திய பாரம்பரியத்தில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களும், உணவு முறைகளும் இயற்கையாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. 

இருப்பினும் புற்றுநோயைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாதிக்கும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். 

Next Story