ஒமைக்ரான் சாதாரண காய்ச்சலை போன்றது தான்-யோகி ஆதித்யநாத்


ஒமைக்ரான் சாதாரண காய்ச்சலை போன்றது தான்-யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 3 Jan 2022 9:30 AM GMT (Updated: 3 Jan 2022 9:30 AM GMT)

15-18 வயது வரையிலான 1.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 2150 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

லக்னோ,

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் இன்று நடைபெற்ற 15-18 வயது வரையிலான சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“ஒமைக்ரான் வேகமாக பரவி வருவது உண்மைதான்.இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் தேவை.இரண்டாம் அலையை ஒப்பிடுகையில் இதன் வீரியம் குறைவு.எனவே,அச்சப்பட தேவையில்லை.

டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய 15-25 நாட்கள் தேவைப்பட்டன.ஆனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டால் விரைவிலேயே குணமாகிவிடலாம். எனினும் இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மாநிலத்தில் 8 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

15-18 வயது வரையிலான 1.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 2150 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. லக்னோவில் மட்டும் 39 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.” 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story