அ.தி.மு.க கூட்டணியில் பாமக உள்ளதா? கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்


அ.தி.மு.க கூட்டணியில் பாமக உள்ளதா?  கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 15 Dec 2021 10:29 AM GMT (Updated: 15 Dec 2021 10:29 AM GMT)

சேலம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற  பா.ம.க 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. இந்நிலையில், பா.ம.க நிர்வாகிகளுடனான சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிப்பெறக்கூடாது என்பதற்காக கூட்டணி தர்மம் மீறி, அதர்மமாகிவிட்டது. நாம் 23 இடங்களிலும் அல்லது 20 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் 15 இடங்களிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கூட்டணிக் கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதால் பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது,' என கூறினார்.

இதற்கு எதிர்கட்சி தலைவரும் , அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார். ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அதில் கூறியதாவது ;

அதிமுக கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? என  நிருபர்கள்  கேள்வி எழுப்பியதற்கு ,நாங்கள் என்ன துரோகம் இழைத்தோம் என பாமக தான் தெளிவுபடுத்த வேண்டும். அதிமுக கூட்டணியில் பா.ம. க. உள்ளதா? என பாமகவிடம் தான் கேட்க வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தலின் போதே கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார். பா.ம.க. மற்ற தொகுதிகளில் ஜெயிக்க மக்கள்தான் வாக்களித்திருக்க வேண்டும் என கூறினார்.

Next Story