தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Feb 2022 10:20 AM GMT (Updated: 16 Feb 2022 10:20 AM GMT)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.

தென்காசி,

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமக பெருவிழா கடந்த 8 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவானது வருகிற 18-ந் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

மேள தாளங்கள் முழங்க, பக்தர்களின் பக்தி கோஷங்கள் ஒலிக்க, சுவாமி தேர், அம்மன் தேர் ஆகிய இரண்டு தேர்களும் நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்தன. இந்த தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் சங்கர், கோமதி, கோவில் நிர்வாக அதிகாரி சுசிலா ராணி, கோவில் ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story