வங்காள தேசம்: படகு தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கேப்டன் உட்பட 8 பேர் கைது


வங்காள தேசம்: படகு தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கேப்டன் உட்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2021 10:00 AM GMT (Updated: 27 Dec 2021 10:00 AM GMT)

இந்த பயங்கர சம்பவத்திற்கு படகின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே காரணம் என அதிகாரிகள் கூறினர்.

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 400 பேருடன் 3 அடுக்குகளை கொண்ட பயணிகள் படகு பர்குனா மாவட்டம் நோக்கி புறப்பட்டது. 

ஜலாஹதி மாவட்டத்தில் உள்ள சுகந்தா ஆற்றில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது படகில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் அறையில் ஏற்பட்ட தீ மளமளவென படகின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

அதிகாலை பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததால் இந்த தீ விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயில் இருந்து தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்ள பல பயணிகள் ஆற்றில் குதித்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 150 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவத்திற்கு படகின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே காரணம் என அதிகாரிகள் கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது, பயணிகளை ஏற்றிச்செல்லும் மூன்று மாடி கொண்ட படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளனர். மேலும் படகில் பாதுகாப்பு உபகரணங்களான மிதவைகள் இல்லை. தீயை அணைக்கும் கருவிகள் படகில் இல்லை என்று கூறினர். படகில் பயணம் செய்தவர்கள் கூறும்போது, அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. படகை உடனே நங்கூரமிடவில்லை. தீ விபத்தி ஏற்ப்பட்ட பின்னர் சிறிது தூரம் சென்றது. மேலும் சிலர் நதியில் மூழ்கி உயிரிழந்தனர் என கூறினர். 

படகு தகுந்த பாதுகாப்பு சாதனங்களோடு இயக்காதது போன்ற பல காரணங்களால், படகின் கேப்டன் உட்பட 8 பேர் கைசெய்யப்பட்டனர். 


Next Story