ரஷிய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!


ரஷிய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!
x
தினத்தந்தி 28 Feb 2022 10:02 AM GMT (Updated: 28 Feb 2022 10:02 AM GMT)

உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுதல் என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் என்று உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கீவ்,

உக்ரைன் மீதான ரஷிய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பு. பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷியாவை சமரச பேச்சு நடத்த இணங்கி வரச்செய்துள்ளது.

முன்னதாக, உக்ரைன் அதிபருடைய ஆலோசகர் உள்ளிட்டோர் அடங்கிய உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையிலான குழு பெலாரஸ் எல்லைக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றடைந்தனர். இந்த அமைதி பேச்சுவார்த்தையில், உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுதல் என்பதே உக்ரைனின் முக்கிய நோக்கம் என்று உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி,  ‘உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர்க்குமாறு, மேற்கத்திய நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரஷிய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

போர் தீவிரமடைந்து உள்ளதால், ரஷியாவுக்கு எதிராக போரிட விரும்பும் ராணுவ அனுபவம் வாய்ந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story