“ரஷியாவிற்கு மிகுந்த வேதனையை கொடுக்க வேண்டும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி


“ரஷியாவிற்கு மிகுந்த வேதனையை கொடுக்க வேண்டும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
x
தினத்தந்தி 16 March 2022 9:50 AM GMT (Updated: 16 March 2022 9:50 AM GMT)

உக்ரைனுக்கு எதிரான போருக்கான விலையாக ரஷ்யாவிற்கு மிகுந்த வேதனையை கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கின. இந்த தாக்குதலை எதிர்த்து உக்ரைன் பாதுகாப்பு படை தீவிரமாக போராடி வருகிறது. சுமார் 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். 

இந்த போரால் இதுவரை இருதரப்பிலும் பலத்த உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;-

“உக்ரைனுக்கு எதிரான போருக்கான விலையாக ரஷ்யாவிற்கு மிகுந்த வேதனையை கொடுக்க வேண்டும். உலகில் உள்ள அனைவரும் தார்மீக ரீதியாக ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். ரஷியாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

உக்ரைனியர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள். ரஷிய சந்தையை விட்டு வெளியேறி வணிகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்களின் டாலர்கள் மற்றும் யூரோக்கள் நமது ரத்தத்துக்காக கொடுக்கப்படுவது இல்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story