சாம்பியன் லீக் கால்பந்து : பி.எஸ்.ஜி அணி வெற்றி
4-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி எஸ் ஜி) அணி வெற்றி பெற்றது
சாம்பியன் லீக் கால்பந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி .எஸ் .ஜி) -கிளப் ப்ரூஜ் அணிகள் மோதின .
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோல் அடித்து (பி.எஸ்.ஜி )அணி முன்னிலை பெற்றது . 2-வது நிமிடத்தில் மற்றும் 7-வது நிமிடத்தில் (பி.எஸ்.ஜி )அணியின் கிலியன் எம்பாப்பே கோல் அடித்தார் . தொடர்ந்து 38- வது நிமிடத்தில் (பி.எஸ்.ஜி) அணியின் லயோனல் மெஸ்சி கோல் அடித்தார். .இதனால் முதல் பாதி முடிவில் (பி.எஸ்.ஜி) அணி 3-0 முன்னிலை பெற்றது .
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 76- வது நிமிடத்தில் (பெனால்டி) உதவியுடன் மெஸ்சி ஒரு கோல் அடித்தார் . எதிராணியால் ஆட்டம் முடிவில் 1 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது . இதனால் 4-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி எஸ் ஜி) அணி வெற்றி பெற்றது .
Related Tags :
Next Story