முஷ்டாக் அலி டி20: 32 பந்தில் சதமடித்த அபிஷேக் ஷர்மா..பஞ்சாப் அணி 310 ரன்கள் குவிப்பு

பஞ்சாப் அணி, பெங்கால் அணியை எதிர்கொண்டது.
முஷ்டாக் அலி டி20: 32 பந்தில் சதமடித்த அபிஷேக் ஷர்மா..பஞ்சாப் அணி 310 ரன்கள் குவிப்பு
Published on

ஆமதாபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.இதில் இன்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, பெங்கால் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது.

குறிப்பாக அபிஷேக் ஷர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த அவர் 32 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.அபிஷேக் ஷர்மா 52 பந்தில் 148 ரன்கள் (16 சிக்சர்கள், 8 பவுண்டரிகள்) எடுத்தார் . மேலும் பிரபசிம்ரன் சிங் 70 ரன்களும், ரமன்தீப் சிங் 39ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com