தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன.?

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று சரிவை சந்தித்துள்ளது.
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

தங்கம் விலை;

2025-ம் ஆண்டில், தங்கத்தின் விலை ஏற்றம் அசாத்தியமானதாக இருந்தது. கடந்த ஆண்டு சுமார் 52 முறை புதிய உச்சங்களை எட்டியது. யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. இது நகை மற்றும் முதலீட்டு பொருட்களில் ஆர்வமுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது. நகை வாங்கும் நடுத்தர இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

2026 ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், சவரன் விலை 99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 2-ந் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 640-க்கும், ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 580-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் விலை குறைந்தது. மாலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 12, 800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்;

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்;

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,72,000க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com