41 வயது நடிகையின் 21 வயது கணவர் 15 மாத மகனை தரையில் 3 முறை அடித்து காயப்படுத்தியதாக புகார்...!

15 மாத மகனை தரையில் அடித்து காயப்படுத்தியதாக தொலைக்காட்சி நடிகையின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
41 வயது நடிகையின் 21 வயது கணவர் 15 மாத மகனை தரையில் 3 முறை அடித்து காயப்படுத்தியதாக புகார்...!
Published on

மும்பை

பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா(41). சப்னே சுஹானே லடக்பான் கே' 'அதாலத்', 'சி.ஐ.டி. மற்றும் 'சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட்', உள்பட பல டிவி தொடர்களில் நடித்து உள்ளார்.

சந்திரிகா விவாகரத்து பெற்றவர் அவர் 2020 இல் தொழில் அதிபரான அமன் மிஸ்ராவை(21) சந்தித்து அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

அப்போது சந்திரிகா கர்ப்பமாக இருப்பதை அறிந்த அமன், சந்திரிகாவை கருக்கலைப்பு செய்ய வலியுறுத்தினார். டாக்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சந்திரிகா குழந்தை பெற்றுக்கொண்டார். குழந்தை தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம், தங்கள் மகன் 14 மாத குழந்தையாக இருந்தபோது, திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சந்திரிகா 15 மாத குழந்தையை 3 முறை தரையில் அடித்து காயப்படுத்தியதாக கணவர் தமன் மிஸ்ரா மீது போலீசில் புகார் அளித்து உள்ளார்.

குழந்தையின் படுக்கையறையில் இருந்து சிசிடிவி பதிவுகளுடன் பங்கூர் நகர் காவல் நிலையத்தை அணுகி உள்ளார்.நடிகை குழந்தையின் படுக்கையறையின் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தபோது, அமன் குழந்தையை தரையில் மூன்று முறை அடிப்பதை கண்டார். சமையலறையில் இருந்தபோது, தனது 15 மாத மகன் அழுவதைக் கேட்டதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை மலாடு மேற்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. குழந்தையின் நிலைமை சீராக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com