ரூ.1.64 கோடி மதிப்பிலான சொகுசு காரை தனக்கு தானே பரிசாக அளித்த பிரபல நடிகை

ரூ.1.64 கோடி மதிப்பிலான சொகுசு காரை பிரபல நடிகை சுஷ்மிதா சென் தனக்கு தானே பரிசாக அளித்து கொண்டார்.
ரூ.1.64 கோடி மதிப்பிலான சொகுசு காரை தனக்கு தானே பரிசாக அளித்த பிரபல நடிகை
Published on

ஐதராபாத்,

பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். அதன்பின் தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி லுக்கு விட தோணலையா பாடலுக்கு நடனம் ஆடினார். நடிகர் நாகார்ஜுனா நடித்த ரட்சகன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.

46 வயது கடந்தும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு குழந்தைகளை தத்தெடுத்த அவர், அவர்களை வளர்ப்பதில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

ஆடம்பர ரக கார்களை வாங்குவதில் அதிக விருப்பம் கொண்டவர். கார் ஓட்டுவதிலும் பிரியம் கொண்டவர். இவர் பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் 730எல்டி, பி.எம்.டபிள்யூ. எக்ஸ்6, ஆடி கியூ7 மற்றும் லெக்சஸ் எல்எக்ஸ் 470 ஆகிய ஆடம்பர கார்களை தன்வசம் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ரூ.1.6 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ.எம்.ஜி. ஜி.எல்.இ. 53 ரக சொகுசு காரை புதிதாக விலைக்கு வாங்கியுள்ளார். அதனை தனக்கு தானே அவர் பரிசாக அளித்து கொண்டார்.

அந்த புதிய காரை ஓட்டியும் பார்த்து மகிழ்ந்த அவர், அந்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காக பகிர்ந்து உள்ளார். புதிய காரின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் வெளியிட்டு உள்ளார். அவருக்கு சகோதரர் ராஜீவ் சென் உள்பட பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அவர் தற்போது, ஆர்யா 3 படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். ஆரியா சரீன் எனற் வேடத்தில் நடித்து வருகிறார். திருநங்கை கவுரி சாவந்த் ஆக புதிய தாலி (Taali) என்ற வெப் தொடரிலும் அவர் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com