"டீசல்" படத்திலிருந்து "ஆருயிரே" பாடல் வெளியீடு


டீசல் படத்திலிருந்து ஆருயிரே பாடல் வெளியீடு
x

சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள ‘டீசல்’ படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். அவரது 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது.

ஆக்சன், திரில்லர் கதையாக உருவான ‘டீசல்’ படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து பீர் கானா பாடல் வெளியாக வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து ‘டீசல்’ படத்திலிருந்து 3வது பாடலான ஆருயிரே என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜி ரவி பாடியுள்ளார். பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

1 More update

Next Story