கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகையின் கல்விக்கு உதவிய நடிகர் ஜெய்

களவாணி படத்தில் விமலின் தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகை மனிஷா பிரியதர்ஷினிக்கு அனைத்து புத்தகங்களையும் ஜெய் வாங்கி கொடுத்து நன்றாக படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று வாழ்த்தினார்.
கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகையின் கல்விக்கு உதவிய நடிகர் ஜெய்
Published on

நடிகர், நடிகைகள் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ஜெய் தற்போது நடிகை மனிஷா பிரியதர்ஷினிக்கு கல்வி உதவி வழங்க முன் வந்துள்ளார். மனிஷா பிரியதர்ஷினி களவாணி படத்தில் விமல் தங்கையாக நடித்து இருந்தார். தொடர்ந்து படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது எல்.எல்.பி சட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அடுத்து ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறார். அதற்கான ஆரம்ப கட்ட படிப்புக்காக தனக்கு புத்தகங்கள் வாங்கித் தருமாறு நடிகர் ஜெய்யிடம் மனிஷா பிரியதர்ஷினி உதவி கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார். அதை ஏற்று மனிஷா பிரியதர்ஷினிக்கு அனைத்து புத்தகங்களையும் ஜெய் வாங்கி கொடுத்து நன்றாக படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்றும், தொடர்ந்து படிப்புக்கான எல்லா உதவிகளையும் செய்வேன் என்றும் வாழ்த்தினார். ஜெய்யை மனிஷா பிரியதர்ஷினி நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com