'இது எனக்கு 5-வது திருமணம்' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி

தற்போது அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற படம் தயாராகி உள்ளது.
'இது எனக்கு 5-வது திருமணம்' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி
Published on

சென்னை,

நடிகை அஞ்சலி தமிழில் 2007-ல் வெளியான 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் அஞ்சலி திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு தற்போது அஞ்சலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தற்போது அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற படம் தயாராகி உள்ளது. ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் அஞ்சலி பங்கேற்று பேசும்போது, ''எனது 50-வது படம் பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படம் தீர்த்து வைத்துள்ளது.

என்னை ஒவ்வொரு படியாக 50-வது படம்வரை தூக்கி விட்டது ரசிகர்கள்தான். எனவே என்னுடைய தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும்'' என்றார்.

பின்னர் பத்திரிகையாளர் ஒருவர் திருமணம் குறித்து பரவும் தகவல் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு அஞ்சலி, எனக்கு திருமணம் என்று பரவி வரும் வதந்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வதந்திகள் மூலம் இதற்கு முன்பு 4 முறை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். இது எனக்கு 5-வது திருமணம்.

நிச்சயமாக எனக்கு திருமணம் நடக்கும் , ஆனால் இப்போது இல்லை. நான் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் என் வீட்டில் வசிக்கவில்லை. வெளியில் வசிக்கிறேன். அதனால், என் வீட்டில் தங்கியிருப்பவர் வாடகை கொடுத்துவிட்டுச் சென்றால் நன்றாக இருக்கும். நான் ஈ.எம்.ஐ செலுத்துகிறேன். எனவே, நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அந்த வதந்திகள் பொய்யானவை." இவ்வாறு கூறினார்

37 வயதாகும் அஞ்சலி தற்போது தெலுங்கில் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com