நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு

நடிகை பாலியல் புகார் தொடர்பாக அனுராக் காஷ்யப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு
Published on

பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அனுராக் காஷ்யப் வீட்டுக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது தனக்கு முன்னால் ஆடைகளை களைந்து நின்று படுக்கைக்கு அழைத்து தகாத முறையில் நடந்து கொண்டார் என்றும் 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து இருப்பதாக பெருமையாக கூறினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனை அனுராக் மறுத்தார். பாயல் கோஷ் புகார் மீது அனுராக்கை கைது செய்ய வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் வற்புறுத்தினார். இந்த நிலையில் பாயல் கோஷ் மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் அனுராக் காஷ்யப் மீது நேரில் சென்று பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக அனுராக் காஷ்யப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை பாயல் கோஷ் வழக்கறிஞர் நிதி சட்புதே டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் வெளியிட்டுள்ளார். பாலியல் பலாத்காரம், நிர்ப்பந்தப்படுத்துதல், சிறைப்பிடித்தல், கேடு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் 376 (1), 354, 341, 342 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com