ரூ.60 கோடி கொடுத்துட்டு போங்க...வெளிநாடு செல்ல நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுப்பு


Actress Shilpa Shetty denied permission to travel abroad
x

வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரிய நடிகை ஷில்பா ஷெட்டியின் மனுவை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.

சென்னை,

யூடியூப் நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல அனுமதிக்கக் கோரிய நடிகை ஷில்பா ஷெட்டியின் மனுவை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.

ஒரு தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முதலில் ரூ.60 கோடியை கொடுத்துவிட்டு கிளம்புங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் கோத்தாரி(வயது60). இவரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ரூ.60 கோடியே 48 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வாங்கிய பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story