காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்

நடிகை தமன்னா, தமிழில் காமெடி கலந்த திரில்லர் காட்சிகள் நிறைந்த அரண்மனை 4 படத்திலும் மற்றும் இந்தியில் வேதா படத்திலும் நடித்து வருகிறார்.
காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்
Published on

வாரணாசி,

தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண கொண்டாட்டங்களுக்காக திரை பிரபலங்கள் பலர் குஜராத்தின் ஜாம்நகரில் குழுமியுள்ளனர்.

இந்நிலையில், பிரபல நடிகை தமன்னா பாட்டியா ஆன்மீக பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், குஜராத்தின் வாரணாசி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். இதுபற்றிய படங்களை அவர் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

அதில், பூக்கள் மலர்ந்திருப்பது போன்ற வடிவங்கள் கொண்ட பச்சை வண்ணத்திலான ஆடையில், கழுத்தில் பூமாலை அணிந்து பக்தி பரவசத்துடன் காணப்படுகிறார். அந்த பதிவில், ஹரஹர மகாதேவ் என்றும் தலைப்பிட்டு உள்ளார். சிவலிங்கத்திற்கு முன்னால் பிரார்த்தனை செய்யும் மற்றொரு புகைப்படமும் பகிரப்பட்டு உள்ளது.

சமீபத்தில், தனது குடும்பத்தினருடன் கவுகாத்தி நகரில் உள்ள காமக்யா கோவிலில் தமன்னா சாமி தரிசனம் மேற்கொண்டார். கடந்த ஜனவரியில், அயோத்தி நகரில் அமைந்துள்ள கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதில், நாடு முழுமைக்கும் முழு அளவில் ஆசிகள் கிடைத்ததற்கான நாள். அதன் அதிர்வுகள், ஆற்றல், ஆசிகள்... நம்முடைய வாழ்நாளில் பார்த்த ஒரு சிறப்பான தருணம். கடவுள் ராமர் வீட்டுக்கே வந்து விட்டார். ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டார்.

கடைசியாக அவர், மலையாளத்தில் வெளியான பாந்திரா படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் அவருக்கு இது அறிமுக படம். தொடர்ந்து, தமிழில் காமெடி கலந்த திரில்லர் காட்சிகள் நிறைந்த அரண்மனை 4 படத்திலும் மற்றும் இந்தியில் நிகில் அத்வானி இயக்கத்தில் வேதா படத்திலும் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com