ஏஐ உதவியால் உருவாகும் இந்தி திரைப்படத்திற்கு அனுராக் காஷ்யப் எதிர்ப்பு

ஏஐ உதவியால் உருவாகும் ‘சிரஞ்சீவி அனுமன்’ என்ற இந்தி படம் அடுத்தாண்டு அனுமன் ஜெயந்திக்கு வெளியாக இருக்கிறது.
ஏஐ உதவியால் உருவாகும் இந்தி திரைப்படத்திற்கு அனுராக் காஷ்யப் எதிர்ப்பு
Published on

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'மகாராஜா' படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரைபில் கிளப்' படத்திலும் நடித்துள்ளார். வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்திலும் நடித்துள்ளார். அனுராக் கஷ்யப். தரமான படங்களை இயக்கியும் தனது படங்களை வெளியிட பல சவால்களை சந்தித்து வந்த அனுராக் காஷ்யப் தென் இந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேற இருப்பதாக அனுராக் கஷ்யப் அதிர்ச்சியளித்தார்.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டா பக்கத்தில் முழுவதுமாக ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படத்துக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார். இந்தப் படத்தை தயாரிக்கும் விஜய் சுப்பிரமணியமை டேக் செய்து அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்துள்ளார். முழுவதுமாக ஏஐ உதவியுடன் சிரஞ்சீவி - அனுமன் - தி ஈடர்னல் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அபுடான்டியா என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது..இந்தப் படத்திற்காக கலேரி 5-இல் 50 என்ஜினியர்கள் வேலை பார்த்து வருவதாகப் படக்குழுவினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில், அனுராக் காய்ஷ்யப் கூறியதாவது: வாழ்த்துகள் விஜய் சுப்ரமணியம். முன்னதாக எழுத்தாளர், இயக்குநர்களை முன்னிருத்திய இவரது தலைமையிலான நிறுவனம்தான் தற்போது ஏஐ உதவியால் படத்தை உருவாக்கியுள்ளது.இறுதியில், இந்த நிறுவனங்கள் உங்களிடமிருந்து பணத்தை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளது. துருக்கி என்ற வியாபாரப் பெயர் வந்ததுபோல உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியாததால் நிறுவனங்கள் ஏஐ பக்கம் சென்றுவிட்டார்கள். இந்தி கலைஞர்களுக்கு முதுகுத் தண்டு இருக்கிறதா? எந்த ஒரு கலைஞரும் அல்லது தன்னைக் கலைஞராக கருதும் எவரும் தங்களுக்கு முதுகுத் தண்டு இருந்தால் சுப்ரமணியத்தைக் கேள்வி கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களது நடிப்பைவிட ஏஐ சிறப்பாக நடிக்கிறதென நினைக்கும் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். தற்போது, ஹிந்தி திரைப்படத் துறையில் முதுகுத் தண்டு இல்லாத, கோழை கலைஞர்களுக்கான எதிர்காலமாக மாறுகிறது. சிறப்பாக செய்துள்ளீர்கள் சுப்ரமணியம். உங்களுக்கு வெட்கம் கிடையாது. நீங்கள் சாக்கடையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு அனுமன் ஜெயந்திக்கு வெளியாக இருக்கிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com