இசைப்புயலுக்கு இன்று பிறந்த நாள்- ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஏ.ஆர் ரகுமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இசைப்புயலுக்கு இன்று பிறந்த நாள்- ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை
Published on

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது இசையால் ரசிகர்களை கட்டுப்போட்டுள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமானின் பிறந்த நாளான இன்று அவரைப்பற்றிய சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.

* ஏ ஆர் ரகுமான் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். ரோஜா படத்தில் வரும் 'புது வெள்ளை மழை மழை இங்கு பொழிகிறது' என்ற பாடல் இன்றளவும் இம்மியளவு கூட குறையாமல் அதே ரசனையோடு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. பலருடைய செல்போன்களில் ரிங்டோனாக இப்போதும் கூட இந்த பாடலே இடம் பெற்றுள்ளது.

* ஏ ஆர் ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், இந்தி, ஆங்கில, சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து பெரும் புகழ் அடைந்தார்.

* ஸ்லம்டக் மில்லியினர் படத்திற்கு இசை அமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வென்றார். இந்த படத்தில் வரும் ஜெய் ஹோ பாடல் மிகச்சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது மற்றொரு விருதும் வழங்கப்பட்டது. இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ ஆர் ரகுமான் பெற்றார்.

*ஏ.ஆர் ரகுமான் இதுவரை 6 தேசிய விருதுகள், 32 பிலிம் பேர் விருதுகள் 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள் என எண்ணற்ற விருதுகளை பெற்று உலகின் இசை உலகத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.

*ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இந்த தம்பதிக்கு அமீன் என்ற மகனும் கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் அமீன் இசைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com