குத்துச்சண்டை வீரராக ஆர்யா

ஆர்யா நடித்து கடந்த வருடம் மகாமுனி, காப்பான் படங்கள் வந்தன. தற்போது பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
குத்துச்சண்டை வீரராக ஆர்யா
Published on

ஏற்கனவே அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை ரஞ்சித் இயக்கி இருக்கிறார். ஆர்யா படத்தை பெயர் வைக்காமலேயே அவர் இயக்கி வந்தார். இந்த நிலையில் படத்துக்கு சார்பட்டா பரம்பரை என்று பெயர் வைத்து இருப்பதாக படக்குழுவினர் நேற்று அறிவித்தனர். அதோடு படத்தில் வரும் ஆர்யாவின் தோற்றமும் வெளியானது. அதில் குத்துச்சண்டை வீரராக வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும். ஏறி ஆடு. கபிலா என்று பதிவிட்டுள்ளார். ஆர்யா தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வடசென்னையில் உள்ள குத்துச்சண்டை வீரர்களை மையப்படுத்தி இந்த படம் தயாராகிறது. இதில் நடிப்பதற்காகவே ஆர்யா கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் அமைப்பை சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாற்றி இருக்கிறார். கே 9 ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com