வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை

தமிழ் பட உலகுக்கு பெருமை சேர்க்கும் நடிகர்களில் முக்கியமானவர், சத்யராஜ். இவர் திரையுலகுக்கு வந்து 43 வருடங்கள் ஆகின்றன.
வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை
Published on

சட்டம் என் கையில் படத்தில் தொடங்கி, பாகுபலி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதில் வில்லனாக 75 படங்களிலும், கதாநாயகனாக 100 படங்களிலும் நடித்து இருக்கிறார். மீதமுள்ள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

250 படங்களில் பெரியார், அமைதிப்படை, நடிகன், 9 ரூபாய் நோட்டு, பூவிழி வாசலிலே, வேதம் புதிது, கடலோர கவிதைகள், பாகுபலி உள்பட பல படங்களை மறக்க முடியாது. விதம்விதமாக வேஷம் போட்டு இருக்கிறேன். இப்போது 10 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார், சத்யராஜ். திறமைக்கு என்றும் மரியாதைதான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com