சென்னை விமான நிலையத்தில் கசப்பான அனுபவம்; நடிகை குஷ்பூ வேதனை

சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி நடிகை குஷ்பூ வேதனை தெரிவித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கசப்பான அனுபவம்; நடிகை குஷ்பூ வேதனை
Published on

சென்னை,

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் நடிகை குஷ்பூ. சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பெயரை டேக் செய்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், முழங்காலில் காயம் அடைந்த பயணியை அழைத்து செல்ல அடிப்படையான ஒரு சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை? என கேட்டுள்ளார்.

வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை கடனாக பெற்று வரும் வரை, சென்னை விமான நிலையத்தில் அரை மணிநேரம் காயத்துடன் காத்திருந்தேன். இதனை விட நல்ல முறையில் நீங்கள் சேவை செய்ய முடியும் என என்னால் உறுதி கூற முடியும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

எனினும், நடிகை குஷ்பூவுக்கு ஏற்பட்ட அவதிக்கு, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டு உள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கான நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்து செல்லப்படும் என டுவிட்டரில் பதிலளித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com