புஸ்ஸி ஆனந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய்

அதிக சோர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
புஸ்ஸி ஆனந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய்
Published on

சென்னை,

தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்திடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். 

பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று நடந்த லியோ வெற்றி விழா நிகழ்ச்சியைத்தொடர்ந்து, ஏற்பட்ட அதிக சோர்வு காரணமாக  உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜயுடன் நடிகர்கள் அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com