கொரோனாவால் வீட்டில் முடக்கம் 275 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த மம்முட்டி

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவியதால் 96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனாவால் வீட்டில் முடக்கம் 275 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த மம்முட்டி
Published on

அரசு ஊரடங்கை பிறப்பித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கொரோனா அச்சத்தால் மாதக்கணக்கில் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். பிரபல மலையாள நடிகர் மம்முட்டி கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி த பிரீஸ்ட் படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு கொரோனாவால் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தார். வீட்டு தோட்டத்தில் நடமாடுவது, புத்தகங்கள் படிப்பது. டி.வி. பார்ப்பது, உடற்பயிற்சிகள் செய்வது என்று நேரத்தை கழித்தார். 275 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். காரில் பல இடங்களில் சுற்றிய அவர் கலூரில் உள்ள ஸ்டேடியம் அருகே காரை நிறுத்தி எதிரில் உள்ள டீ கடையில் தேநீர் குடித்தார். இந்த வீடியோ வைரலாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com