சாதி பற்றிய விமர்சனம்: நடிகை ரித்விகா பதிலடி

சாதி பற்றி விமர்சித்தவர்களுக்கு நடிகை ரித்விகா பதிலடி கொடுத்துள்ளார்.
சாதி பற்றிய விமர்சனம்: நடிகை ரித்விகா பதிலடி
Published on

கார்த்தியுடன் மெட்ராஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. ரஜினியின் கபாலி படத்திலும் வந்தார். பரதேசி, அழகு குட்டி செல்லம், அஞ்சல, ஒருநாள் கூத்து, இருமுகன், டார்ச் லைட் ஆகியவையும் ரித்விகா நடிப்பில் வந்த முக்கிய படங்கள். மேலும் 3 படங்கள் அவர் கைவசம் உள்ளன.

சமீபத்தில் டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்-2 விலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவுக்கு அதிகமாக ரசிகர்கள் சேர்ந்தனர். பட வாய்ப்புகளும் வருகிறது. இந்த நிலையில் ரித்விகாவின் சாதி பற்றிய பேச்சுகள் திடீரென்று கிளம்பின. குறிப்பிட்ட சாதி என்பதால் போட்டியில் வென்றார் என்று சமூக வலைத்தளத்திலும் விமர்சித்தனர்.

இதைத்தொடர்ந்து ரித்விகாவின் சாதி பற்றி சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சாதி ரீதியாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரித்விகா கூறியிருப்பதாவது:-

ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு, நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக்பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை. இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா.. இவ்வாறு ரித்விகா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com