ஷாருக்கானின் பதான் படத்தில் பல மாற்றங்களுக்கு தணிக்கை துறை பரிந்துரை

தீபிகா படுகோன்-ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் மாற்றங்கள் செய்தி சான்றிதழுக்கு சமர்பிக்குமாறு தயாரிப்பாளருக்கு தணிக்கை துறை பரிந்துரைத்து உள்ளது.
ஷாருக்கானின் பதான் படத்தில் பல மாற்றங்களுக்கு தணிக்கை துறை பரிந்துரை
Published on

மும்பை

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது.

இதில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின. இந்த பாடல் 13.5 கோடி பார்வைகள் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வரும் நிலையில் அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது ஆபாசத்தின் உச்சம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் காட்சி காரணமாக தணிக்கை துறை படத்தில் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. பாடல் காட்சிகள் உட்பட சில மாற்றங்களைச் செய்து மீண்டும் சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்குமாறு திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி பதான் படத்தின் தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

சிபிஎப்சி குழுவின் சான்றிதழுக்காக சென்றபோது குழுவின் வழிகாட்டுதல்களின்படி ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது மற்றும் படத்தில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com