தனுஷ், கிரித்தி சனோன் படத்தின் அடுத்த படப்பிடிப்பு தளம் இதுவா ? - இயக்குனர் பகிர்ந்த புகைப்படம் வைரல்


Dhanush, Kriti Sanon begin Tere Ishk Mein in Leh? Aanand L Rais pic goes viral
x
தினத்தந்தி 13 April 2025 5:37 PM IST (Updated: 13 April 2025 5:53 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ் தற்போது நடித்து வரும் இந்தி படம் 'தேரே இஷ்க் மெய்ன்'.

சென்னை,

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் இந்தி படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

தனுஷின் முந்தைய இந்தி படங்களான 'ராஞ்சனா, அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இப்படத்தையும் இயக்கி வருகிறார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றநிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றது. இந்நிலையில், படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி இருக்கிறது.

அதன்படி இயக்குனர் ஆனந்த் எல் ராய், லேவிலிருந்து ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகும்நிலையில், விரைவில் இங்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story