

சென்னை ,
தனுஷ் நடிப்பில் டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாறன் .சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
மாறன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார் .