தனுசின் புதுப்பேட்டை படம் 2-ம் பாகம்?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006-ல் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கொக்கி குமார் கதாபாத்திரத்தில் வந்த தனுசுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தனுசின் புதுப்பேட்டை படம் 2-ம் பாகம்?
Published on

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006-ல் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கொக்கி குமார் கதாபாத்திரத்தில் வந்த தனுசுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தனுசை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் ஆகிய படங்களை இயக்க உள்ளதாக செல்வராகவன் அறிவித்தார். தனுஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் என்னை செதுக்கிய செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை கவர்வேன் என்று கூறியிருந்தார்.

புதுப்பேட்டை 2-ம் பாகம் தயாராகுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். புதுப்பேட்டை வெளியாகி தற்போது 15 ஆண்டுகள் ஆகின்றன. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். செல்வராகவனும் புதுப்பேட்டை வெளியான நாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பயணம் மேலும் தொடரும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் புதுப்பேட்டை 2-ம் பாகம் உருவாகும் என்பதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com