நடிகை சமந்தாவின் சாகுந்தலம் இவ்வளவு கோடி நஷ்டமா...!

3டி தொழில்நுட்பத்துடன் வெளியான இப்படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது.
நடிகை சமந்தாவின் சாகுந்தலம் இவ்வளவு கோடி நஷ்டமா...!
Published on

மும்பை

நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணசேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

அதிதிபாலன், கவுதமி, மதுபாலா, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். 50-60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், வசூல்ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டு உள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இப்படத்தின் வாழ்நாள் வசூல் வெறும் 7 கோடி தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இணைந்து தயாரித்து இருந்தார் தில் ராஜு இணை தயாரித்துள்ளார். இந்த படத்தால் ரூ.22 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

3டி தொழில்நுட்பத்துடன் வெளியான இப்படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. சுமார் 65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 7 கோடி மட்டுமே வசூல் செய்து 32 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாகுந்தலம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படு தோல்வி படமாக அமைந்தது குறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. படம் வெளியாவதற்கு முன்னரே பிரபலமான ஓடிடி தளம் ஒன்றுக்கு 35 கோடிக்கு விற்கப்பட்டதால் இழப்பு 22 கோடியோடுபோனது. இல்லையேல் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என புலம்பியுள்ளார். தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை.

புராணக்கதையை பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் 3டியில் எடுத்து தேவையில்லாத செலவு செய்து விட்டார். இரண்டு மூன்று காட்சிகள் மட்டுமே படத்தில் 3டி காட்சிகள். அது தேவையில்லாத செலவு. ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்தி சீரியல் பார்த்தது போல இருந்தது என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமந்தாவை தவிர வேறு எந்த கதாபாத்திரமும் நன்றாக இல்லை என ரசிகர்கள் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். சரியாக பிளான் செய்து ஸ்கெட்ச் போடும் தனக்கு இந்த படம் பெரும் சறுக்கலாக அமைந்து விட்டது என புலம்புகிறார் தில் ராஜு. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com