‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெளியேறிய நடிகை ஓவியா கொச்சி சென்றார்?

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா விமானம் மூலம் கொச்சி சென்றதாக தெரிகிறது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெளியேறிய நடிகை ஓவியா கொச்சி சென்றார்?
Published on

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ஓவியா திட்டமிட்டு வெளியேற்றப்பட்டாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் கடும் விவாதப் பொருள் போன்று சென்று கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கோடிக்கனக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் அவர் பலமுறை எவிக்சன் ஆனாலும், ரசிகர்கள் அவரை காப்பாற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் ஆரவ்வின் காதல் விவகாரத்தால், மன உளைச்சலுடன் காணப்பட்ட, ஓவியா அங்கிருக்கும், நீச்சல் குளத்தில் தற்கொலைக்கு முயன்றார். அதன் பின் அங்கிருந்த சக பங்கேற்பாளர்கள் அவரை காப்பாற்றினர்.

இதைத் தொடர்ந்து அவர் நான் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்புவதாக கூறினார். இதனையடுத்து ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.

இதற்கிடையில் பிரபல ஆங்கில் நாளிதழ் சில தினங்களுக்கு முன்னர் ஓவியாவை எலிமினேஷன் முறையில் வெளியேற்ற முடியாது. ஆனால், நிகழ்ச்சியின் மத்தியில் அவராகவே வெளியேறிவிடுவார்.

எனினும், இது தெடர்பாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இல்லை. இது உண்மையாக இருந்தால், ஓவியாவின் ரசிகர்களுக்கு இது பெரிய பின்னடைவாகும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதனால் ஓவியா திட்டமிட்டு வெளியேற்றப்பட்டாரா அல்லது டிஆர்பி-க்காக இவை அனைத்தும் நிகழ்த்தப்படுகிறதா என்று சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதன் பிறகு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி சென்றதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளி யேறியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com