டுவிட்டரில் போலி கணக்கு நடிகர் சார்லி போலீசில் புகார்

நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்து தங்கள் படங்கள் சம்பந்தமான விவரங்களையும், அரசியல் சமூக கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
டுவிட்டரில் போலி கணக்கு நடிகர் சார்லி போலீசில் புகார்
Published on

நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்து தங்கள் படங்கள் சம்பந்தமான விவரங்களையும், அரசியல் சமூக கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்கள் பெயர்களில் மர்ம நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி அவதூறு கருத்துகள் பதிவிட்டு சர்ச்சையாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் சார்லி பெயரில் டுவிட்டர் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சார்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சார்லி கூறும்போது, எனக்கு டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராமில் கணக்கு இல்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களோடு நேரடியாக சிறந்த நட்பு உள்ளதால் சமூக வலைத்தளங்கள் பக்கம் நான் வரவில்லை. ஆனால் எனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com