'இவன் தந்திரன் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்

ஆர். கண்ணன் இயக்கும் ‘இவன் தந்திரன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா வெளியிட்டுள்ளார்.
'இவன் தந்திரன் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்
Published on

சென்னை,

ஜெயம் கொண்டான்' படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் 'இவன் தந்திரன்' படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் ஆர்.கண்ணன்.

'தள்ளி போகாதே', 'பூமராங்', 'இவன் தந்திரன்', 'காசேதான் கடவுளடா', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' போன்ற படங்களை தயாரித்த மசாலா பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கினார்.

இப்பொழுது ஜெ.ஜெயகிருஷ்ணன் நல்லாசியுடன், மசாலா பிக்சர்ஸ் சார்பில் "இவன் தந்திரன்-2" படத்தை தயாரித்து இயக்குகிறார், ஆர்.கண்ணன்.

மணிரத்னம் அறிமுகம் செய்த கவுதம் கார்த்திக், ஷரத்தா ஶ்ரீநாத் இருவரும் 'இவன் தந்திரன்' படத்தில் நடித்திருந்தார்கள். இதன் இரண்டாம் பாகத்தில் சரண் நாயகனாக நடிக்கிறார். இவரை, 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் கவுதம் வாசுதேவ்மேனன் மாஸ்டர் நடிகராக அறிமுகப்படுத்தினார். மாஸ்டர் நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர், 'சிங்கம்3','வடசென்னை' படங்களில் முக்கிய கேரக்டரில் தன்னை அடையாளப் படுத்தினார். 'கே.ஜி.எப்-2' படம் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். இப்பொழுது "இவன் தந்திரன்-2" வில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சமுத்திரகனி, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், கலைராணி மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com