பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான் நடிகை ஓவியா தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான் என நடிகை ஓவியா தகவல் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான் நடிகை ஓவியா தகவல்
Published on


சென்னை

ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த திரைப்பட நடிகை ஓவியா நேற்று மாலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து அவராகவே வெளியேறினார் என கூறப்பட்டது. நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதன் பிறகு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி சென்றதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான், மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என நடிகை ஓவியா கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com