நீண்ட நாள் காதலருடன் விரைவில் திருமணமா? - நடிகை டாப்சி பதில்

பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவ் என்பவரை நடிகை டாப்சி 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
நீண்ட நாள் காதலருடன் விரைவில் திருமணமா? - நடிகை டாப்சி பதில்
Published on

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

தற்போது 35 வயதாகும் நடிகை டாப்சி, டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவ் என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இது தொடர்பாக ஒரு பேட்டியில் நடிகை டாப்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை எந்த தகவலையும் நான் பொதுவெளியில் வெளியிட்டது இல்லை. இனிமேலும் வெளியிட மாட்டேன்" என்று தெரிவித்தார்.

அதே சமயம், நடிகை டாப்சியின் திருமணம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி, வரும் மார்ச் மாத இறுதியில் ராஜஸ்தானின் உதய்பூரில் டாப்சியின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய கலாச்சார முறைகளின்படி நடைபெற உள்ளதாகவும், குடும்ப உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com