’சிகிரி’ பாடலுக்கு வைப் ஆன பாட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

சமீபத்தில் ’பெத்தி’ படத்திலிருந்து 'சிகிரி.. சிகிரி' பாடல் வெளியானது.
Grandma gets rapped for the song 'chikiri' - Video goes viral on the internet
Published on

சென்னை,

ராம் சரண் தற்போது நடித்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கி வரும் இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து 'சிகிரி.. சிகிரி' பாடல் வெளியானது.

இப்பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்பாடலில் ராம் சரண் வித்தியாசமான ஸ்டெப்களை போட்டிருப்பார். இப்பாடலை கொண்டு ரசிகர்களும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

சமீபத்தில், ராம் சரணின் சிகிரி.. சிகிரி.. பாடலுக்கு ஒரு பாட்டி நடனமாடியது வைரலாகி வருகிறது. விழாவில், அவர் சிகிரி.. சிகிரி.. பாடலுக்கு ராம் சரண் போட்ட ஸ்டெப்களை செய்ய முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com