ஜீ.வி.பிரகாஷ் -அபர்ணதியுடன் வசந்தபாலன் புதிய படம்

ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார். இவர், ஆர்யாவுடன் டி.வி. நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
ஜீ.வி.பிரகாஷ் -அபர்ணதியுடன் வசந்தபாலன் புதிய படம்
Published on

அங்காடி தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை டைரக்டு செய்த வசந்த பாலன் அடுத்து, ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார். இவர், ஆர்யாவுடன் டி.வி. நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

ஜீ.வி.பிரகாஷ்-அபர்ணதியுடன் பள்ளிப் பருவத்திலே நாயகன் நந்தன் ராம், பசங்க நாயகன் பாண்டி, பாகுபலி வில்லன் பிரபாகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், ராதிகா சரத்குமார் நடிக் கிறார்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜி.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருக்கிறார். கதை-திரைக்கதை-டைரக்ஷன்: வசந்த பாலன். ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். இவர், விஷால் நடித்த இரும்புத்திரை, மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி ஆகிய படங்களை வெளியிட்டவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com