என்னிடம் தவறாக நடந்தார்... டைரக்டர் மீது நடிகை புகார்

என்னிடம் தவறாக நடந்தார்... டைரக்டர் மீது நடிகை புகார்
Published on

இந்தி கவர்ச்சி நடிகை உர்பி ஜாவேத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

துபாயில் உர்பி ஜாவேத் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்து துபாய் போலீசிடம் சிக்கியதாகவும் பேசப்பட்டது. பின்னர் இதனை மறுத்தார். இந்த நிலையில் சினிமாவில் பட வாய்ப்பு தேடி அலைந்தபோது இயக்குனர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து உர்பி ஜாவேத் அளித்துள்ள பேட்டியில், "நான் மும்பை வந்த பிறகு சினிமா வாய்ப்புகளுக்காக நிறைய ஆடிஷன்களுக்கு சென்றேன். ஒரு இயக்குனர் என்னை உனது காதலனாக பாவித்து கட்டிப்பிடித்துக்கொள். நெருக்கமாக இரு என்று கட்டாயப்படுத்தினார். அறையில் கேமரா இல்லையே என்றேன். என் கண்கள்தான் கேமரா என்றார்.

விருப்பம் இல்லாமல் கட்டிப்பிடித்தேன். அவர் தவறாக நடக்க முயன்றதால் அங்கிருந்து வெளியேறி விட்டேன். இன்னொரு இந்தி இயக்குனர் வெளிப்படையாகவே என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். சினிமா வாய்ப்பு தேடும் இளம் பெண்கள் இதுபோன்ற நபர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com