ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி

ஹாலிவுட் நடிகரான டிரினி லோபஸ் கொரோனாவுக்கு பலியானார்.
ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி
Published on

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோய்க்கு பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான டிரினி லோபஸ் பலியாகி உள்ளார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வந்த இவருக்கு காய்ச்சலும் சளியும் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார். இவர் மேரேஜ் ஆன் த ராக்ஸ், த பப்பி இஸ் ஆல்சோ எ பிளவர், த டர்ட்டி டஜன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார். டிரினி லோபஸ் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஆலன் கார்பீல்டு, ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ, அமெரிக்க பாடகர்கள் ஜோ.டிப்பி, ஜான் பிரைன், டிராய் ஸ்னீட், இங்கிலாந்து நடிகர் டீம் புரூக், நடிகை ஹிலாரி ஹீத், நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com