'புதியபாதை' படத்தின் 2-ம் பாகம் எடுக்கிறேன் - நடிகர் பார்த்திபன்

'புதியபாதை' படத்தின் 2-ம் பாகம் எடுக்கிறேன் - நடிகர் பார்த்திபன்
Published on

பார்த்திபன் நடித்து இயக்கி 1989-ல் வெளியான 'புதிய பாதை' படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் நாயகியாக சீதா நடித்து இருந்தார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியை அதே பெண் திருமணம் செய்துகொள்வது போன்ற கதைக்களத்தில் தயாராகி இருந்தது. பார்த்திபனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது.

34 ஆண்டுகள் கழித்து புதியபாதை படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கப் போவதாக பார்த்திபன் தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது, 'புதிய பாதை' எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமான படம். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தற்கால டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை உருவாக்க உள்ளேன் படத்துக்கு 'டார்க் வெப்' என்ற பெயர் வைத்துள்ளேன். படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை படமாக்கவும் பார்த்திபன் திட்டமிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com