20 வயதில் மகன்...! 49 வயதில் போனி கபூர் மகனுடன் காதல் திருமணம் செய்யும் நடிகை

போனி கபூரின் மகனை காதலித்து வரும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, தனது இரண்டாவது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் சூசகமாக பதிவிட்டுள்ளார்.
20 வயதில் மகன்...! 49 வயதில் போனி கபூர் மகனுடன் காதல் திருமணம் செய்யும் நடிகை
Published on

மும்பை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்தவர் போனி கபூர். இவரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இவர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தக்க தையா தையா பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

மலைக்கா அரோராவுக்கு தற்போது 49 வயது ஆகிறது. இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த ஜோடிக்கு அர்ஹான் என்கிற மகன் இருக்கிறார். அவருக்கு 20 வயது ஆகிறது.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைக்கா அரோரா, அவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார் அர்ஜுன் கபூர்.

இந்நிலையில், மலைக்கா அரோராவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நான் சம்மதித்துவிட்டேன் என பதிவிட்டு ஹார்டின் எமோஜிகளை போட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் 2வது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதை தான் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளதாக கருதி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மலைக்கா அரோராவுக்கும் அர்ஜுன் கபூருக்கும் 12 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com